இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கண்டனம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கண்டனம்

ஹரியாணா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தாக்குதல் நடத்திய இந்துத்துவா அமைப்புக்கு , நடவடிக்கை எடுக்காத மாநில முதல்வர்  மனோகர் லால் கட்டாருக்கு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கண்டனம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: ஹரியாணா மாநிலத்தில் குர்கான் மாவட்டத்துக்கு உள்பட்ட வாஸிராபாத், தி அடுல் கடாரிய செüக், தி சைபர் பார்க், தி பக்தாவர் செüக் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அதிக கூட்டம் கூடுவதால் பள்ளிவாசலுக்கு உள்ளே தொழுதுவதற்க்கு இடம் இல்லாத நிலையில் பள்ளிவாசலில் ஓட்டி உள்ள இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகையை முஸ்லிம்கள் நிறைவேற்றி வருவது நீண்ட நாளைய பழக்கமாகும், இந்த தொழுகை 15, 20 நிமிடங்களில் முடிந்து விடும் இதனால் யாருக்கும் இடைஞ்சல் ஏற்படுவதில்லை இது 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கமாகவும் இருக்கிறது.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிவசேனா, ஜக்கான் மஞ்சு, அகில பாரதீய இந்து கீரந்திதல், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், ஹிந்து கிராந்தி தளம், கெü ரக்ஷாக் தளம்,  போன்ற 12 இந்து மதவாத அமைப்புகள் தீடீரென்று தங்களது தொண்டர்களை திரட்டி வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை தொழுதுக் கொண்டு இருந்தவர்களை பலத்கரமாக தடுத்து நிறுத்தி மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இறைவனை வணங்கும் கூட்டத்திற்க்கு இடைஞ்சல் விளைப்பது வண்மையாக கண்டிதக்கதாகும். இது சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஹரியானா முதலைமைச்சர் மனோகர் லால் கட்டார் அவர்களிடம் முறையீடு செய்த போது முஸ்லிம்கள் பொது இடத்தில் தொழுதுவதற்க்கு அனுமதி இல்லை என்றும் அவர்கள் பள்ளிவாசல் உள்ளேயே தொழுது கொள்ளவேண்டும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசியல் சாசனம் கொள்கைகளை மறந்து விட்டு இந்துத்துவா கொள்கையில் நம்பிக்கை உண்டு அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஓரு முதலமைச்சரிடமிருந்துஇதை தவிர வேறு பதிலை எதிர்பார்க்க முடியாது என்பதை சிறுபான்மை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.முஸ்லிம்கள் இந்த தேசத்தில் தொடர்ந்து வகிக்க வேண்டும் என்று விரும்பினால் மாற்று இறைச்சி சாப்பிடும் பழக்கத்தை அவர்கள் விட்டுவிட வேண்டும் என்று கூறிவரும் இதே ஹரியானா முதலைமைச்சர் தான் என்பதை நாட்டு மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள்.

வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையை ஹீரோ ஹோண்டா சவுக், சஹாரா மால் போன்ற காலி இடங்களில் தொழுத முஸ்லிம்கள் அமைதியை குலைக்கிறார்கள் என்றும் நல்லிணக்க சுமூகமான வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்றும் குற்றம்ச்சாட்டப்படுகிறார்கள். 25 ஆண்டு கலமாக இல்லாத இந்த குற்றச்சாட்டு தீடீரென இந்துத்துவா அமைப்புகளால் இப்பொழுது கிளப்பப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாக அமைந்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *