இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சென்னை, கொல்கத்தா மற்றும் இந்தூரில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பெங்களூரில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த நிலையில், 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது. இந்தபோட்டியில் வெற்றி பெறும் முனைப்பில், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *