இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவன தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உடனான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பின்னர் பேசிய பிரதமர் மோடி இந்தியாவை ஒரு சிறிய ஜப்பானாக உருவாக்குவதே தமது நோக்கம் என்றார். தொழில் தொடங்க தேவைப்படும் கட்டமைப்புகள் இந்தியாவில் எளிது கிடைப்பதாக கூறிய மோடி ஜப்பான் தொழிலதிபர்களை தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் ஏற்கனவே ஜப்பானை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் வெற்றிகரமாக தொழில் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் இந்தியா ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வலுப்பெற்றுவரும் சூழலில் புதிதாக தொடங்கப்படும் தொழில்களால் அது மேலும் உறுதியாகும் என்று பிரதமர் மோடி கூறினார். 2014-ம் ஆண்டு தமது அரசு பொறுப்பேற்ற பிறகு தொழில் தொடங்க ஏற்ற நாடுகளுக்கான உலகவங்கியின் பட்டியலில் 140-வது இடத்திலிருந்து 100-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *