ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கியது. இதில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஐந்துக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இதில், இந்திய அணி சார்பில், ஹர்மன்பீரித் சிங் 2 கோல்களும், எஸ்.வி.சுனில், லலித் உபத்யாய், ரமன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

2-வது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி, 7-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *