Saturday, July 22, 2017
அண்மைச் செய்திகள்

நேரலை

முக்கிய செய்திகள்

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

சிலி நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பலவண்ண மலர்கள் ஒரே நேரத்தில் பூத்துக்குலுங்கும் காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

தங்கத்தின் விலை பவுனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது…

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்‍கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நேரடியாக போராட்டத்தில் குதித்துள்ளார். புதுச்சேரியை விட்டு கிரண் பேடி வெளியேற வேண்டும் என கோரி அவர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஏ.டிபி டென்னிஸ் போட்டியை சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றக் கூடாது… தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

தமிழகத்திற்கு நீட் தேர்வு ரத்து கோரிக்கை குறித்து ஆவண செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாவிட்டால், ஆட்சியிலிருந்து விலகுங்கள்… முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் கமல் மீண்டும் வலியுறுத்தல்…

புதிய குடியரசுத் தலைவராக தேர்வு பெற்ற ராம்நாத் கோவிந்த்துக்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வாழ்த்து… கே. ஆர்.நாராயணன் போன்று சுதந்திரமாக செயல்பட வேண்டும் என கோரிக்கை…

நாட்டின் 14-வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு… பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து…

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையே சுமூகமான உறவு இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பெய்த கன மழையினால் தலைநகர் இஸ்தான்புல் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியும் இரண்டரை கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது பாகிஸ்தான்… அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் பரபரப்பு தகவல்கள்…

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தால் பணிநீக்கம் உறுதி… நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் எச்சரிக்கை

ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் டெல்லி பயணம்… நீட் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டம்….

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியலுக்கு வந்துவிட்டேன்,,,, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகாருக்கு நடிகர் கமலஹாசன் பதில்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை… காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தகவல்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்மாஸன் நகரில் கோடைப் புயலின் விளைவாக கோல்ப் பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியாகின.

புதுச்சேரியில் கடலில் குளித்தபோது காணாமல் போன மாணவரை தேடும் பணியில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக கூறி மாணவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

அதிமுக அம்மா கட்சியின் கழகப் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு பெங்களூரு சிறைச்சாலையில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்று கழக நிர்வாகிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தவறுகளை தட்டிக் கேட்க தயங்கமாட்டேன் என கமலஹாசன் மீண்டும் ஆவேசம் முடிவெடுத்தால் நானும் முதல்வரே என பரபரப்பு கருத்து…

பணியின் போது உயிரிழக்கும் தீயணைப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு இனி 10 லட்சம் ரூபாய் நிவாரணம்.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

விமான நிலையங்களின் தலைவர்கள் பெயர்களை மாற்ற மத்திய அரசு திட்டம்… நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெயந்த் சின்கா தகவல்…

துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வெங்கையா நாயுடு மனுத்தாக்கல்… எதிர்க்கட்சிகள் கட்சிகள் சார்பில் மனுத்தாக்கல் செய்தார் கோபால்கிருஷ்ணா காந்தி

தலித்துகள் மீதான தாக்குதல்கள் குறித்து மாநிலங்களைவியல் இன்று விவாதம்… எம்.பி. பதவியிலிருந்து பகுஜன் சமாத் கட்சி தலைவர் மாயாவாதி விலகியதை அடுத்து மத்திய அறிவிப்பு..

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.